செய்திகள்

செயலிழந்து போயுள்ள பிரஜாசக்தி நிலையங்கள்: அரசியல் சாயம் பூசிக்கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்களா?

மலையக இளைஞர் மற்றும் யுவதிகளின் மேம்பாட்டுக்காக தொண்டமான் “பவுண்டேசன் ஊடாக அரச நிதியில் ஆரம்பிக்கப்பட்ட பிரஜாசக்தி நிலையங்கள் இயங்க முடியாமலும் அந்த நிலையங்களில் தொழில்புரிந்த சுமார் 400 பேர் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் அவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்த மூன்று மாதங்கள் வழங்கபடவில்லை பல பிரஜாசக்தி நிலையங்கள் இயங்கவில்லை. தோட்டத்தொழிலாளரின் குடும்பங்களை சார்ந்த இந்த இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் தொண்டமானிடம் பேசி முடிவுக்கு வர இந்த இளைஞர் யுவதிகள் எததனையோ முறை முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தை அணுகியபோது அவர் பிரஜாசக்தி நிலையங்கள் தனது அமைச்சின் இயங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கி வரும் தொண்டமான் பயிற்சி நிலையங்கள்  பிரஜாசக்தி நிலையங்கள்  ரம்பொடை கலாச்சார நிலையம் ஆகியன மலையக மக்கள் பயனடைவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

இதில் தொண்டமான் பயிற்சி நிலையத்தினால் சாதாரணதர கல்வியை முடித்து உயர்தரம் செல்லமுடியாத இளைஞர் யுவதிகளுக்கும் உயர்தர கல்வியை முடித்து பல்கலைக்கழகம் செல்ல முடியாத இளைஞர்  யுவதிகளுக்கும் தொழிற்பயிற்சி வழங்கி வருகின்றது. அதே போல ரம்பொடை கலாச்சர கல்வி நிலையமும் உயர்தர கல்வியை முடித்த மாணவரகள் இசை துறையில் ஊக்குவிக்க செயற்பட்டு வருகின்றது.

பிரஜாசக்தி நிலையங்கள் 2005 ம் ஆண்டு மலையக பகுதிகள் கண்டி கேகாலை  பதுளை  நுவரெலியா  ஹட்டன்  காலி  இரத்தினபுரி ஆகிய இடங்களில் மொத்தமாக 45 நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்கள் முன்பு இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் கீழூம் பின்னர் கால்நடைவள மற்றும் கிராமிய கொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழும் காணப்பட்டது. இது 2014ம் ஆண்டிலிருந்து அரச நிதியிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

சில நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்களின் இலவச கணணி வகுப்புக்கள்  இணைய வசதிகள் உடற்பயிற்சி நிலையங்கள் மேலதிக வகுப்புக்கள், மருத்துவ முகாம்கள் கல்வி கருத்தரங்குகள் என்பன முடங்கி கிடக்கின்றன. இது சம்பந்தமாக விடயங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கும் ஜனாபதிபதியின் கவனத்திற்கும் பல தடவைகள் கொண்டு சென்றபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என பாதிக்கப்பட்டவா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆகவே இவ்வூழியர்களுக்கு அவர்களுக்கான சம்பளத்தை வழங்கி அவர்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் பாதிக்கப்பட்டவா்களின் கோரிக்கையாகும்.

வெறும் அரசியல் சாயம் பூசிக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சம்பந்த பட்டவர்கள் உடனடி நடவடிக்கைகளில் இறங்குவார்களா?

(க.கிஷாந்தன்)