Search
Tuesday 17 September 2019
  • :
  • :

அச்சத்தின் பிடியில் ஐஎஸ் குடும்பங்கள்

அச்சத்தின் பிடியில் ஐஎஸ் குடும்பங்கள்

சமகளம்-நன்றி ரொய்ட்டர்
ஈராக்கிலிருந்து ஐஎஸ் அமைப்பினர் பெருமளவிற்கு அகற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களது குடும்பத்தவர்கள் தாங்கள் பழிவாங்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தங்கள் கணவன்மார் சகோதரங்கள் உட்பட குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெருமளவிற்கு கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கு நடவடிக்கைகளிற்காக தாங்கள் பழிவாங்கப்படலாம் என ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பெண்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் அனேகமாகவானர்கள் தற்போது மௌசூலின் கிழக்கு பகுதியில் உள்ள பகுதியொன்றில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்
ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என மிடானிலிருந்து கடந்த வாரம் 21 பேருடன் தப்பிவெளியேறிய 61 வயது பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளியேறியவர்கள் அனைவரும் பெண்கள் குழந்தைகள் என அவர் தெரிவித்தார்.
மௌசூலின் பழைய நகரிற்கான மோதலின் போது எனது கணவர் காயமடைந்தார் அவரை காப்பாற்றிக்கொண்டுவரமுயன்றோம் ஆனால் முடியவில்லை அதனால் அவரை அங்கேயே இறப்பதற்கு விட்டுவிட்டு வந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

814913766

இதேவேளை ஐஎஸ் அமைப்பினால் கடந்த மூன்று வருடகாலமாக கடும் பாதிப்பை எதிhநோக்கிய பொதுமக்கள் தங்கள் மத்தியில் ஐஎஸ் அமைப்பின் குடும்பத்தவர்களிற்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஐஎஸ் குடும்பத்தவர்களை அச்சுறுத்தும் துண்டுபிரசுரங்கள் விநியோகிப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி கற்கள் போன்றவை வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழிவாங்குவது ஓரு தீர்வாக அமையாது என்கிறார் அலி இஸ்கந்தர்- இவர் ஐஎஸ் அமைப்பின் குடும்பங்களை சேர்ந்தவர்களின் முகாம்கள் அமைந்துள்ள பார்டெல்லா பிராந்தியத்தின் தலைவர். இந்த குடும்பங்கள் புனர்வாழ்வு பயி;ற்சிகளை பெறவேண்டும் என்றும் அவர் குறி;ப்பிடுகின்றார்
மௌசூல் அதிகாரிகள் ஐஎஸ் குடும்பங்களை முகாம்களிற்குள் முடக்குவதற்கான உத்தரவொன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர் அதன் மூலம் அவர்களை கொள்கைரீதியில் புனர்வாழ்விற்கு உட்படுத்தலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
எனினும் கூட்டுத்தண்டனை நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளை பாதிக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன ஈராக்குறித்த பங்குதாரர்கள் அல்லாத ஓரு தலைமுறையை இது உருவாக்கிவிடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் அவர்களை தனிமைப்படுத்தினால் மீண்டும் எவ்வாறு தேசிய நீரோட்டத்திற்குள் அவர்களை கொண்டுவருவது சமீபத்தில் முகாமிற்கு சென்று திரும்பிய அதிகாரியொருவர் கேள்வி எழுப்புகின்றார் அவர்கள் மீண்டும் ஐஎஸ் ஆக மாறுவார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்

உம் ஹமுடியை 14 வயதில் அவரது தந்தை ஐஎஸ் தீவிரவாதியொருவரிற்கு திருமணம் செய்துவைத்தார்- ஹமுடி கர்ப்பிணியாகயிருந்தவேளை ஓரு வருடத்திற்கு முன்னர் அந்த தீவிரவாதி கொல்லப்பட்டார்.அந்த குழந்தை தற்போது முகாமி;ல் தரையில் உறங்குகின்றது.ஐஎஸ் குழந்தை என்ற பெயரை அது வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியிருக்கும்.
32 உம் சுகாயிப் இரண்டு மாதங்களிற்கு முன்னர் இறுதியாக தனது கணவருடன் கதைத்தேன் என்கிறார் அவர் நிச்சயமாக கொல்லபட்டிருப்பார் என எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சுகாயிப் தெரிவித்தார்.
எனது கணவர் ஐஎஸ் அமைப்பில் இணைந்தவேளை நான் அவரை விட்டுவிலகப்போகிறேன் என எச்சரித்தேன் எனினும் நான்கு பிள்ளைகள் காரணமாக அதனை செய்யவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
தீவிர மதப்பற்றுள்ள எனது கணவர் ஒரு பொறியியலாளர் ஐஎஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் அவர்களுடன் இணைந்தார் பின்னர் அவர் தனது தவறினை உணர்ந்தபோதிலும் அவரால் அதிலிருந்து மீள முடியாத நிலை காணப்பட்டது அவர் தனது வாழ்க்கையை வீணாக்கிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உம் சுகையிப் போன்று பல பெண்கள் தங்கள் கணவர் ஐஎஸ் அமைப்பில் இணைவதை தடுப்பதற்கான அதிகாரமோ பலமோ தங்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்தனர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *