Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதம்

நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு  தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதம்

தியாகி திலீபனின் நினைகூரலை நடத்தும் அடிப்படை உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கடிதத்தில், இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட் அமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய தமிழ் தேசிய சார்பு கட்சிக்ள கையெழுத்திட்டுள்ளன.

தமிழ் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா, ஈழத்தமிழர் சுயாட்சின் கழகம் சார்பில் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சி.சிற்பரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.அத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

இதேவேளை புளொட் சார்பில் கலந்து கொண்ட பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டுள்ளார்கள்.(15)received_246806809997886 received_341655413945541 received_346986003325392 received_348907676302721 received_362813435126957 received_377071113689639 received_636576880562080 received_649249635699352 received_2389458878024891


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *