Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அடுத்தக் கட்டம் என்ன? ஆளும் கட்சிக்குள் குழப்பம்

அடுத்தக் கட்டம் என்ன? ஆளும் கட்சிக்குள் குழப்பம்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்குள் ஆட்சியை தொடர்வது தொடர்பாக குழப்ப நிலைமையொன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகியுள்ள நிலையில் ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்கு அவருக்கு இடமளித்து தாம் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டுமென அராங்கத்திற்குள் இருக்கும் குழுவொன்று தெரிவிக்கும் நிலையில் இன்னுமொரு குழு அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என தெரிவித்து வருகின்றது.
இதேவேளை உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வோம் என இன்னுமொரு குழு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதனால் இறுதி தீர்மானங்களை எடுக்க முடியாது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்த பின்னர் இறுதி தீர்மானமொன்றுக்கு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கையெடுக்கவுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *