Search
Sunday 20 January 2019
  • :
  • :

”அணிக்கு சுமையாக இருக்காது ஓய்வு பெற தயார்” : மெத்தியூஸ் கிரிக்கெட் சபைக்கு கடிதம்

”அணிக்கு சுமையாக இருக்காது ஓய்வு பெற தயார்” : மெத்தியூஸ் கிரிக்கெட் சபைக்கு கடிதம்

ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட தோல்விக்குறிய பொறுப்புகளை தன்மீது சுமத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகிய அஞ்சலோ மெத்தியூஸ் தனது சேவை இலங்கை அணிக்கு தேவையில்லையென தேர்வுக் குழுவினர் நினைத்தால் தான் ஓய்வு பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான எஸ்லி டி சில்வாவுக்கு இது தொடர்பாக மெத்தியூஸ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஆசிய கிண்ண போடடியில் ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பில் ஒரு பகுதியை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் முழுப் பொறுப்பையும் தன் மீது சுமத்த முயற்சிப்பது தன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அணியின் பயிற்றுவிப்பார் மற்றும் தேர்வு குழுவினர் ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளுக்கு தான் தகுதியானவரா? என தீர்மானிக்க முடியும் எனவும் அவ்வாறு எனது உதவி தேவையில்லை என நினைத்தால் அணிக்கு சுமையாக இருக்காது ஓய்வு பெற்று செல்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ண சுற்றுப்பயணத்தின் பின்னர் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய தான் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்ததாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். -(3)New Anji 1 New Anji 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *