Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அதிகரிக்கும் தேங்காய் விலை – கட்டுப்படுத்த அரசாங்கம் வேலைத்திட்டம்

அதிகரிக்கும் தேங்காய் விலை – கட்டுப்படுத்த அரசாங்கம் வேலைத்திட்டம்

தேங்காய் விலை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்தள்ளதாக தென்னை , பனை மற்றும் கிதுல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் தேங்காயின் விலை 100 ரூபாவை கடந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தேங்காயுடன் தொடர்புடைய உற்பத்தி பொருட்களுக்கு கேள்விகள் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இலங்கையில் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இவ்வாறாக அதிகரிக்கும் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *