Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து இலங்கை குடும்பத்தை இழுத்துச்சென்று தடுப்பு முகாமில் அடைத்தனர் அவுஸ்திரேலிய அதிகாரிகள

அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து இலங்கை குடும்பத்தை இழுத்துச்சென்று தடுப்பு முகாமில் அடைத்தனர் அவுஸ்திரேலிய அதிகாரிகள

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி குயின்ஸ்லாந்தின் மத்திய பகுதியில் பிலியோலா என்ற பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் குடும்பமொன்றின் வீட்டிற்குள் நுழைந்த அவுஸ்திரேலிய அதிகாரிகளை அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச்சென்று தடுப்பு முகாமில் அடைத்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம் என்பவரையும் அவரது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளையும் அதிகாரிகள் பலவந்தமாக அவர்களது வீட்டிலிருந்து வெளியேற்றி மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் அடைத்துள்ளனர்.
குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தை அதிகாரிகள் எந்தவேளையிலும் நாடு கடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு அவர்களது வீட்டிற்கு சென்ற அவுஸ்திரேலிய எல்லை காவல்படையினரும் காவல்துறையினரும் தமிழ் குடும்பத்தினரை பத்து நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டதுடன் பின்னர் அவர்களை விமானம மூலம் மெல்பேர்ன் கொண்டு சென்றுள்ளனர்.
2012 ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற நடேசலிங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தின் புகலிடக்கோரிக்கையை முற்றாக ஆராய்ந்துள்ளதாகவும் அவர்களிற்கு அவுஸ்திரேலியா பாதுகாப்பு அளிக்கவேண்டிய தேவையில்லை எனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
செல்லுபடியாகக்கூடிய விசா இல்லாதவர்களும் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் இழந்தவர்களும் தாங்களாக நாட்டிலிருந்து வெளியேறவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர் அவ்வாறு வெளியேறாதவர்கள் தடுத்து வைக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *