Search
Friday 23 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]
தலைப்பு செய்திகள்

அதிருப்தியில் மகிந்த

அதிருப்தியில் மகிந்த

ஈஸ்டர் குண்டுதாக்குதல்களை தொடர்ந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ திருப்தியடைவில்லையென அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்டவினால் இது தொடர்பாக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டினுள் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் உரிமை ஜனாதிபதிக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை. அவருக்கு எதிர்க்கட்சியின் கடமைகளை மாத்திரமே நிறைவேற்ற முடியும். நாட்டிலே தேசிய ரீதியில் முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தினுள் பிரேரணைகளை முன்வைத்தல், கருத்துத் தெரிவித்தல் மற்றும் அதற்கு வெளியே பொது மக்களை விழிப்பூட்டல் உள்ளிட்ட பணிகளை அவரால் மேற்கொள்ள முடியும். தற்போது மக்கள் மத்தியில் நிலவுகின்ற அமைதியற்ற நிலை, சந்தேகம் மற்றும் அச்சம் என்பவற்றினை அகற்றுவதற்காக அவர் ஏற்கனவே ஊடகச் செய்திகள் மற்றும் வாய்மூல விளக்கமளித்தல்கள் என்பவற்றின் ஊடாக பொது மக்களை விழிப்படைய செய்துள்ளார்.
இதேவேளை கடந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இது வரையில் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திருப்தியடைய முடியாதுள்ளது. எவ்வாறாயினும், பொது மக்கள் சார்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சரியான தீர்மானங்கள் தொடர்பாக தமது ஒத்துழைப்பினை வழங்குவதற்கு அவர் எந்நேரமும் தயாராக உள்ளார் என்பதனையும் அறியத் தருகின்றேன். என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *