Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் உண்ணாவிரதம்

அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் உண்ணாவிரதம்

அத்துரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் இப்போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களதும் விருப்பமாகுமெனவும் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் குறித்த விடயங்களை உள்ளடக்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *