Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் உணவு தவிர்ப்புப் போராட்டம்

அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து  வவுனியாவிலும் உணவு தவிர்ப்புப் போராட்டம்

வவுனியா- கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனிநபரொருவர் இன்று திங்கட்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென கூறும் பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபர் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்குள் அவருக்கு ஆதரவாக உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த த.சண்முகம் (வயது 49) உள்ளிட்ட ஏனைய சிலரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *