Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அநீதிகளுக்கு எதிராக போராடி நீதிமன்றத்தில் வெற்றிக் கண்ட மஸ்கெலிய தொழிலாளர் குடும்பம்

அநீதிகளுக்கு எதிராக போராடி நீதிமன்றத்தில் வெற்றிக் கண்ட மஸ்கெலிய தொழிலாளர் குடும்பம்

மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களுக்கு, அரசியல் நோக்கங்களால் குடியிருப்புகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொழிலாளர்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளது
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனித வள அவிவிருத்தி அறக்கட்டளைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த மே மாதம் 28 ஆம் திகதி வீடுகள் கையளிக்கப்பட்டன.
23 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடுகள் கையளிக்கப்படவில்லை.
இந்த நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்றதுடன், இதன்போது இரண்டு வீடுகள் கையளிக்கப்படாமை தொடர்பில் தொழிலாளர்கள் அமைச்சரிடம் வினவியிருந்தனர்.
தீயினால் பாதிக்கப்படாத தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிலருக்கும் இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதேவேளை, இந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்யச் சென்றிருந்த நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், அது தொடர்பிலான காட்சிகளை நியூஸ்பெஸ்ட்டால் ஒளிபரப்ப முடியாமற்போனது.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வீடுகளை வழங்கி வழக்கை சமரசத்துடன் முடித்துக்கொள்ள அமைச்சு முன்வந்ததை அடுத்து, இருவருக்கான வீடுகள் கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு அநீதி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை நியூஸ்பெஸ்ட் வௌிக்கொணர முயற்சித்த போது, அன்று இடையூறு விளைவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த தொழிலாளர்களுக்கு ஏற்படவிருந்த அநீதியை நீதிமன்றம் தலையிட்டு தடுத்து, அவர்களுக்கு சாதகமான தீர்வை வழங்கியுள்ளது. -(3)


2 thoughts on “அநீதிகளுக்கு எதிராக போராடி நீதிமன்றத்தில் வெற்றிக் கண்ட மஸ்கெலிய தொழிலாளர் குடும்பம்

  1. சிவா

    மக்களுக்கு சேவை செய்வதில் இனியாவது கட்சி பேதம் இல்லாமல் செயற்படுங்கள் தலைவர்களே

    Reply
  2. மலையகத் தமிழன்

    NEWS FIRST எப்போதுமே தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தொடர்பான தகவல்களைத் திரித்துகூறி மக்களைத் திசை திருப்புவது உலகறிந்த உண்மை. குறிப்பிட்ட ஊடகத்தின் இயக்குனர் வழிகாட்டலில் இப்படியான கேவலம் நடந்து கொண்டு இருக்கிறது.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *