சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளிற்கும் ரி20 அந்தஸ்த்தை வழங்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது.
ஐசிசியின் பிரதமநிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் இன்று இதனை அறிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்துள்ள ரிச்சட்சன் புதிய தரவரிசைப்பட்டியலொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 18 அணிகளிற்கு ரி 20 அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரிச்சட்சன் யூலை முதலாம் திகதி முதல் அனைத்து மகளிர் அணிகளிற்கும் ரி20 அந்தஸ்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேவேளை 2019 ஜனவரி முதல் அனைத்து ஆண்அணிகளிற்கும் ரி 20 அந்தஸ்த்து வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்காலத்தில் பந்தை சேதப்படுத்துவது எதிரணி வீரர்களை வார்த்தைகளால் சீண்டுவது போன்றவற்றில் ஈடுபடும் வீரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடு;க்கவுள்ளதாகவும் ரிச்சட்சன் அறிவித்துள்ளார்.

Previous Postடோனிக்கு டுவிட்டரில் புகழாரம்
Next Postதென்கொரிய வடகொரிய தலைவர்கள் நாளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு