Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அனைத்து ஊழியர்களையும் வேலைக்கு அழைக்க தேவையில்லை

அனைத்து ஊழியர்களையும் வேலைக்கு அழைக்க தேவையில்லை

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும் அனைவரும் உடனடியாக தொழிலுக்கு செல்ல வேண்டுமென்ற கட்டாயம் இல்லையென சுகாதார துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களையே பணிகளுக்கு அழைக்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 வீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக கருதக் கூடாது எனவும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கவில்லையெனவும் இதனால் அவதானத்துடனேயே மக்கள் நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அனைத்து ஊழியர்களையும் தொழிலுக்கு அழைக்க வேண்டுமென்றில்லையெனவும் நிறுவனங்களில் சமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *