Search
Thursday 15 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

”அனைவருக்கும் நிழல்” வடக்கில் 25 கிராமங்களில் 600 வீடுகள்

”அனைவருக்கும் நிழல்” வடக்கில் 25 கிராமங்களில் 600 வீடுகள்

”அனைவருக்கும் நிழல்” என்ற கிராம சக்தி மாதிரி கிராமதிட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தென்மாகாணங்களில் 1200 வீடுகளை நிர்மானிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராம வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த கிராமங்களை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் மேலும் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது, அதேபோன்று இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *