Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அன்ரொயிட் மொபைல் பாவனையாளர்களுக்கு வைரஸ் தொடர்பான அவசர எச்சரிக்கை

அன்ரொயிட் மொபைல் பாவனையாளர்களுக்கு வைரஸ் தொடர்பான அவசர எச்சரிக்கை

அன்ரொயிட் (android) வகை கையடக்க தொலைபேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணையத்தள வைரஸ் ஒன்று பரப்பிவிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக கையடக்க தொலைபேசி பாவனையாளர்களை அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணனி அவசர சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைரஸ் தொலைபேசியிலுள்ள தரவுகளை அழித்து தொலைபேசியை இயங்கவிடாது செய்துவிடுமெனவும் இதனால் தொலைபேசிகளை அப்டேட் செய்யுமாறு கோரும் பட்சத்தில் அது தொடர்பாக அவதானத்துடன் இருக்கவேண்டுமெனவும் அப்டேட் செய்யும் நேரத்திலேயே அந்த வைரஸ் ஊடுருவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகத்திற்கு இடமான இணையத்தளங்கள் , குறுந்தகவல்களை திறந்து பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *