Search
Sunday 8 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்

அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பில் இன்று ஆரம்பமாகும், இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

அவர் நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதேவேளை, இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் இலங்கை அரச அதிகாரிகள், வர்த்தக மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.Alice-Wells-met-maithri-2

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *