Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்க குழு யாழ்ப்பாணத்தில் காணியை பார்வையிட்டது ஏன்? கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி

அமெரிக்க குழு யாழ்ப்பாணத்தில் காணியை பார்வையிட்டது ஏன்? கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி

அமெரிக்காவிலிருந்து வந்த செனட் குழு உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணத்தில் காணியொன்றை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
அங்கு அமெரிக்க படை முகாமை அமைப்பதற்காகவா காணி பார்வையிடப்பட்டது என எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பியுள்ளனர். இது தங்களுக்கு பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் இதுபற்றி அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அங்கு காணி பார்வையிடப்பட்டமை தொடர்பாக தனக்கு தெரியாது எனவும் தனது அனுமதியின் கீழ் அது நடந்தது அல்லவெனவும் வெளிநாட்டு விவகார அமைச்சு அதற்கான அனுமதியை வழங்கியிருந்ததா என்றும் தெரியாது எனவும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *