Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் (வயது 94) உடல்நலக்குறைவினால் காலமானார். இவர் அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர். இவரது மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் காலமானார். பார்பராவின் இறுதிச்சடங்கின் போது புஷ் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால், ஹாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ரத்த தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *