Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமைச்சரவையில் ஜனாதிபதி ஆவேசம்!

அமைச்சரவையில் ஜனாதிபதி ஆவேசம்!

இன்று இரவு ஜனாதிபதியினால் விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டதுடன் அதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வேளையில் சபாநாயகரும் அந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் தெரிவுக்குழுவினூடாக தேசிய பாதுகாப்புடன் தொடர்பான வெளியிடக் கூடாத தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுதாகவும் இதனால் இது தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்குமாறு கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதி கடும் கோபத்துடனேயே கதைத்துள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *