Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமைச்சின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது : வடிவேல் சுரேஷ்

அமைச்சின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது : வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அனுமதி இன்றி தொழிலாளர்களுக்கு எதிராக இனி வழக்குகள் போட முடியாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் தொழில் செய்வர்களுக்கும் மலையத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அனுமதி இன்றி காணி மற்றும் இருப்பிடம் சம்பந்தமான வழக்குகள் போட முடியாது மேற்படி பிரச்சனை உள்ளவர்கள் தனியாவோ குழுவாகவே அமைச்சில் என்னை சந்திக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி மற்றும் இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் காணப்படுபவர்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *