Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு உலக உணவுத் திட்டம் தெரிவு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு உலக உணவுத் திட்டம் தெரிவு

இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு ‘உலக உணவுத் திட்டம்’ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பசியை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்கள் நிறைந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட பங்களித்ததற்காகவும் உலக உணவுத் திட்டத்திற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்தல் வெளியிடப்பட்டது.
நோபல் பரிசுகளை பெறுபவர்கள் தொடர்பான அறிவித்தல்கள் சுவீடன் ஸ்டாக்ஹோம் நகரில் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்புக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும், வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கும் அறிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *