தலைப்பு செய்திகள்

அம்பன் சூறாவளியில் சிக்கி இந்தோனேசியா கடலுக்கு சென்ற இலங்கை மீனவ படகுகள்

அம்பன் சூறாவளியில் சிக்கி இந்தோனேசியா கடலுக்கு சென்ற இலங்கை மீனவ படகுகள்

இலங்கையிலிருந்து கடலுக்கு சென்றிருந்த 20 மீன்பிடி படகுகள் அம்பன் சூறாவளியில் சிக்கி இந்தோனேசியா கடல் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
காலி , அம்பலாங்கொடை , குடாவெல்ல ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து கடந்த மாதத்தில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு சென்ற படகுகளே இவ்வாறாக இந்தோனேசியா கடல்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த படகுகளில் உள்ள மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த படகுகள் தற்போது சர்வதேச கடல்பகுதி நோக்கி வருவதாகவும் இவற்றுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *