Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்றால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்றால்  அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுக்கு அப்பால் ஒரு அரசாங்கத்திடம் சரனடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது இறந்துபோய் இருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகின்றார்.ஒரு விடயத்தை இராணுவத் தளபதி மறந்துவிட்டார் அதாவது சரனடைந்தவர்கள், பொதுமக்களுக்கு முன்னால் சரனடைந்தவர்கள், தமது பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்கள் இவர்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் இறந்து போனதுக்கான காரணம் என்ன சரனடைந்தவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் இறந்து போய்விட்டார்கள் என்று கூறினால் எவ்வாறு இறந்து போனார்கள்? எவ்வாறு கொலை செய்யப்பட்டார்களா? யாரால் கொல்லப்பட்டார்கள்? என யாழ்ப்பாணம் – கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது கேள்வி எழுப்பியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *