Search
Sunday 17 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளது : பொது எதிரணி சாடல்

அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளது : பொது எதிரணி சாடல்

அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முற்றாக செயலிழந்து விட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்திலுள்ள பிரபல அமைச்சர்களுக்கு கூட இந்த அரசாங்கத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை இல்லாது போயுள்ளது. அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முற்றாக செயலிழந்த நிலையிலேயே இருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பொலிஸாரும் பெறும் அபகீர்த்திக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவற்றால் அரசாங்கம் சகலரினாலும் நிராகரிக்கும் நிலைமையிலேயே இருக்கின்றது. அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளால் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கூட அமைச்சர்களினால் சரியாக குறிப்பிடவும் முடியாதுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *