Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்திற்கு அடிபணிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நடக்காது-செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கத்திற்கு அடிபணிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நடக்காது-செல்வம் அடைக்கலநாதன்

கொழும்பு – புதிய மகசின் சிறைச்சாலையில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கனகசபை தேசவதாசன் சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.இன்று அவரை நேரில் சந்தித்து நீராகரமளித்து அவருடைய உண்ணாவிரதத்தை முடித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கடந்த அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலே அதற்கு ஆதரவை தெரிவித்திருந்தோம். எமது பிரச்சினைகளுக்கு தீர்வை இந்த அரசாங்கம் பெற்றுத்தரும் என எதிர் பார்த்தோம். அவற்றில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் பல பிரச்சினைகளுக்கு இது வரையில் தீர்வு காணப்படவில்லை. ஜனாதிபதியும் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வேறுபட்ட திசைகளில் பயணிப்பதே இதற்கு காரணமாகும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு அடிபணிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நடக்காது என்றும், அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் அரசின் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *