Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு பூராகவும் போராட்டங்கள் நடக்கும்

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு பூராகவும் போராட்டங்கள் நடக்கும்

சைற்றம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகளும் , தொழிற்சங்கங்களும் மற்றும் மாணவர் அமைப்புகளும் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
நாடு பூராகவும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தியும் அத்துடன் வேலைத்தளங்களில் கறுப்புகளை பறக்கவிட்டும் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்தும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்ட ஏற்பாட்டளார்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஜே.வி.பி , ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் முன்னிலை சோஷலிச கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த கட்சிகளின் கீழ் செயற்படும் தொழிற்சங்கங்களான சுகதார சங்கங்கள் , போக்குவரத்து சங்கங்கள் , ஆசிரியர் சங்கங்கள் , மின்சார துறைசார்ந்த சங்கங்கள் , துறைமுக சங்கங்கள் , நீர்வழங்கல் துறை சங்கங்கள் , அனைத்து நிறுவன தனியார் ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் ஆதரவளிக்கவுள்ளன. அத்துடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் , அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் ஆதரவளிக்கவுள்ளனர்.
இதன்படி இன்று காலை முதல் நாடு பூராகவும் வைத்தியசாலைகள் , பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள் , மின்சார சபை அலுவலகங்கள் , துறைமுகங்கள் , போக்குவரத்து துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு முன்னாலும் சுதந்திர வர்த்தக வலய பகுதிகளிலும் மற்றும் பிரதான நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *