Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை!

அரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சு பதவியொன்று வழங்கப்படுமென முன்னர் கூறப்பட்ட போதும் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை பதவி வழங்கும் நிகழ்வில் அவருக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் 28 அமைச்சுகளும் 40 இராஜாங்க அமைச்சுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதற்கமைய இன்றைய தினத்தில் 28 அமைச்சுகளுக்குமான அமைச்சர்கள் பதவியேற்றுவிட்டனர். அத்துடன் 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இவ்வாறான நிலைமையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு இனியும் அமைச்சு பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனபோதும் அவருக்கு அரசாங்கத்தில் உயர் பதவியேதும் வழங்கப்படலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாது செய்து புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் போது துணை பிரதமர் பதவியொன்று உருவாக்கப்படலாம் எனவும் அதற்கு இவர் நியமிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மைத்திரிபால சிறிசேன சபாநாயகராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆனால் இந்த தகவல் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *