Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்க தகவல் திணைக்களத்தால் வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு

அரசாங்க தகவல் திணைக்களத்தால் வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வன்னி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு வவுனியாவில் இடம்பெற்றது.

இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் மாவட்ட செயலக ஊடக இணைப்பாளர் உப்புல் பாலசூரிய தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தகவல் அறியும் உரிமை தொடர்பிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்தி நோக்கிய தகவல்களைப் பெற்றுக் கொண்டு அதனை வெளிப்படுத்துதல் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக அரசாங்க தகவல் பணிப்பாளர் சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

IMG_6759 IMG_6776

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *