தலைப்பு செய்திகள்

அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு-சி.வி.கே.சிவஞானம்

அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு-சி.வி.கே.சிவஞானம்

இலங்கை தமிழரசுக் கட்சி என்ற விரூட்சம் அழியாமல் இருப்பதற்கு வித்திட்டவர்களில் தந்தை செல்வாவிற்கும் அமரர் கோப்பாய் வன்னியசிங்கத்திற்கும் உண்டு. அமரர் வன்னியசிங்கம் தமிழ்த்தேசியத்தின் விடுதலைக்காக பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்காகவும் கையாண்டவர் இதில் ஒன்றுதான் இந்த வாழைக்குழைச் சங்கமும் அதுமட்டுமன்றி ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் அடைவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டவர். இன்று இந்த நிகழ்வில் அமரர் வன்னியசிங்கத்தின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருக்கின்றார்கள் அவர்களும் தந்தை வழியில் பல முயற்சிகளை தொடரவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமகன் கு.வன்னிய சிங்கத்தின் 60 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தலைமையில் இன்று நீர்வேலி வாழைக்குலைச் சங்கத்தில் நடைபெற்றபோது வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய இனம் வாழவேண்டும் என்ற இலட்சியத்துடன் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகானின் நினைவு நாள் இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்ப காலகர்த்தாக்களில் இவரும் ஒருவர் இவரின் தலைமைத்துவத்தில் கீழ் இன்றும் இக் கட்சி சென்றுகொண்டிருக்கின்றது அதே பாதை பின்பற்றுகின்றவர்களில் நானும் ஒருவன் தமிழ்த்தேசியத்தினுடைய விடுதலை என்பது அவருடைய துணிச்சலில் உள்ளது. பாராளுமன்றத்தில் அதன் துணிச்சலை வெளிப்படுத்தியவர் பாராளுமன்றத்தில் துணிந்து எதையும் சொல்லக்கூடிய ஓருவர் பல விடையங்களை செய்தும் உள்ளார்.

தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம் ,நாகநாதன் ,இராசவிரோதயம் போன்றோர் விதைத்துவிட்ட அந்த விதை வளர்ந்து விரூட்சமாகிக் கொண்டுதான் இருக்கிறது. சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் தளராது செயற்படுவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *