Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளின் இறுதி கூட்டங்கள்

அரசியல் கட்சிகளின் இறுதி கூட்டங்கள்

நாளை (02) நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடித்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனைத்து அரசியல் கட்சிகள் , சுயேச்சைக்குழுக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளைய தினம் மாலை தெற்கிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் தமது தலைவர்கள் தலைமையில் இறுதி கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளளன.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இறுதி பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மருதானை டீன்ஸ் வீதியில் நடத்தப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு புதுக்கடை பகுதியில் நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு புதுக்கடை ஜும்மா மஸ்ஜித் வீதியில் நடத்தப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் இறுதி கூட்டங்கள் நுவரெலியா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படவுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *