Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியல் கைதிகளை கோத்தபாய விடுவிக்க முடியும் என்றால் நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது? மைத்திரிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

அரசியல் கைதிகளை கோத்தபாய விடுவிக்க முடியும் என்றால் நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது?  மைத்திரிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்வதாக ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ஸ கூறியிருக்கின்றமையை சுட்டிக்காட்டி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், இதைத்தானே நான் உங்களுடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன் எதிர்வரும் போயா தினத்துக்குள் ஏன் நீங்கள் இதனை செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நீங்கள் செய்யக்கூடிய அதே விடையத்தை தான் ஜனாதிபதியானால் செய்ய முடியும் என்று ஒருவர் கூறும்போது நீங்களே அதனை செய்வதால் எந்த எதிர்ப்பும் இருக்கப்போவதில்லை என்றும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசியல் காரணங்களுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இந்த அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்க்க மாட்டார் என்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ஆக்குவதற்கு மிகவும் கடினமாக உழைத்த தமிழ் மக்களுக்கு இது ஒரு பிரதியுபகாரமாக இருக்கும் என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *