அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது -பிரதமர் மஹிந்த
தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அவர்களில் பலரின் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.அத்துடன் அவர்களின் விடுதலை தொடர்பாக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.
மேலும் 34 புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரென வெளியாகிய செய்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.இதன்போது, கடந்த பௌர்ணமி தினத்தன்று 34 புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரென சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது குறித்த தகவலை பிரதமர் தெரிவித்தார்.(15)




