Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியல் கைதிகள் தொடர்பாக மீண்டும் செவ்வாய் கலந்துரையாடல்

அரசியல் கைதிகள் தொடர்பாக  மீண்டும் செவ்வாய் கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலை தொடர்ந்து மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
நேற்றுமுன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.
அதேவேளை, அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில், அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக மற்றொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *