Search
Monday 16 September 2019
  • :
  • :

அரச ஊழியர்களின் அலுவலக ஆடை தொடர்பான புதிய சுற்று நிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி

அரச ஊழியர்களின் அலுவலக ஆடை தொடர்பான புதிய சுற்று நிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி

அரச ஊழியர்கள் அலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பாக புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பொது நிர்வாக அமைச்சரினால் குறித்த சுற்று நிருபம் தொடர்பான யோசனை சமர்பிக்கப்பட்டதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி அரச பெண் ஊழியர்கள் சாரி , ஒசரி ஆகியவற்றுக்கு மேலதிகமாக வேறு எந்த கலாச்சார ஆடையையும் அணிய முடியும் என்பதுடன் முகத்தை மறைக்காத வகையில் அந்த ஆடை அமைய வேண்டுமென அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *