Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணி பகிஷ்கரிப்பில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணி பகிஷ்கரிப்பில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 அணி முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளீர்ப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்காக மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்கும் போது மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாவிடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு,கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நெ்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது.

அவரச சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கவுள்ளதுடன் சிறுவர் வைத்தியசாலைகள் ,சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் பிரசவ விடுதிகளுக்கு இந்த பணி பகிஷ்பரிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார்.

 n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *