Search
Saturday 16 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அலோக் ஷர்மாவின் இலங்கை விஜயம் ரத்து

அலோக் ஷர்மாவின் இலங்கை விஜயம் ரத்து

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் தெரேசா மே எதிர்வரும் அறிவித்துள்ள நிலையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக அமைச்சர் ஆலோக் சர்மாவின் ஸ்ரீலங்கா விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை வரை அவர் நாட்டில் தங்கியிருப்பாரென கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாத அமர்வில் பிரித்தானியா சார்பில் பங்கேற்றிருந்த ஆலோக் சர்மா, இலங்கைக்கு வழங்கப்படும் இரண்டு வருட கால அவகாசத்தில் ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா விஜயத்தின் போது மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அவர் அழுத்தம் கொடுப்பாரென அரசியல் அவதானிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *