Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்

அவசரகால சட்டத்தினை நீக்க ஜனாதிபதி தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடுமையான அவசரகால சட்டத்தினை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.இதேவேளை இலங்கையில் சுமூகநிலை ஏற்பட்டுவிட்டது என்ற செய்தியை சுற்றுலாப்பயணிகளிற்கு தெரிவிப்பதற்காக அவசரகாலநிலையை நீக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த வாரம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஏப்பிரல் 21 ம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஒவ்வொரு மாதம் 22 ம் திகதியும் அவசரகால சட்டத்தினை நீடித்து வந்தார்.எனினும் ஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் வியாழக்கிழமையுடன் அவசரகால சட்டத்தினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளன.ஜனாதிபதி அவசரகாலசட்டத்தினை நீடிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிடவில்லை என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *