Search
Sunday 8 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவதூறு ஏற்படுத்தியதாக இணையத்தளம் ஒன்றுக்கு எதிராக உதயா நகைக்கடை உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு

அவதூறு ஏற்படுத்தியதாக இணையத்தளம் ஒன்றுக்கு எதிராக உதயா நகைக்கடை உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு

இணையத்தளம் சிலவற்றில் தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்டு அவதூறை ஏற்படுத்தியதாக உதயா நகைக்கடை உரிமையாளர் இன்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாட்டைத் தளமாக கொண்டு இயங்கும் சில இணையத்தளங்கள் தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு மாறான நன்கு சோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன், தமது தொழில் நடவடிக்கையும் பாதிப்படையச் செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்து வவுனியா நகரப் பகுதியில் உள்ள உதயா நகைகடை உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு வலயப் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் அதிபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள இணையங்கள் அதில் தனது பெயரையும் இணைத்து தனது நற்பெயரை களங்கப்படுத்த முயற்சித்துள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட வவுனியா பொலிசார் சைபர் கிராம் மூலம் நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் எனவும் உதயா நகைக்கடை உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

IMG_7890

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *