Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவன்கார்ட் வழக்கிலிருந்து கோதா விடுதலை

அவன்கார்ட் வழக்கிலிருந்து கோதா விடுதலை

அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சிசாலை தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக கோதாபய ராஜபக்‌ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை அந்த நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த வழக்கிலிருந்து அவர் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அந்த மனு அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டபோது அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆணையாளரின் எழுத்துமூல அனுமதியின்றி, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என, கோட்டாபய ராஜபக்ஸவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மனுவுக்கு அனுமதியை வழங்கியுள்ளது.
அதற்கமைய, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான இயலுமை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அற்றுப்போயுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனை மனுவை நிராகரித்து, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கட்டளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவினூடாக செல்லுபடியற்றதாகியுள்ளது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் இன்றுடன் செல்லுபடியற்றதாகியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *