Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவர் நான் இல்லை : நவீன் திஸாநாயக்க

அவர் நான் இல்லை : நவீன் திஸாநாயக்க

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தான் அல்லவென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா, நந்திமித்ரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி வேட்பாளர் தெரிவின் போது அமைச்சரின் பெயரும் குறிப்பிடப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் ஒரு குடும்பத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் கட்சி அல்ல. பல்வேறு அரசியல் கருத்துக்கள் கொண்ட அரசியல் அணிகளே எம்மிடம் உள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடி தான் நாம் எமது ஜனாதிபதி வேட்பாளரை முன்னிருத்துவோம். மிகவும் ஜனநாயகமான முறையிலேயே அனைத்து அணிகளிடம் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நாம் அந்த தீர்மானத்தை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நீங்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அது நான் இல்லை என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *