Search
Thursday 27 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவுஸ்திரெலியா அணியில் 7 வயது சிறுவன் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் துணை தலைவர்

அவுஸ்திரெலியா அணியில் 7 வயது சிறுவன் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் துணை தலைவர்

அவுஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில், 7 வயதுடைய ஆர்ச்சி சில்லர் என்ற சிறுவன் இணைக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்னில் யாரா பார்க்கில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற கோடைகால விழாவில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணியினர் பங்கேற்றனர். இதன்போது போர்டர், கவாஸ்கர் கிண்ணம் இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போதுதான் 7வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டு, அணியில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
பிறக்கும் போதே இதயத்தில் பல்வேறு சிக்கல்களோடு பிறந்த ஆர்ச்சி சில்லர், 7வயதுக்குள் இதய அறுவை சிகிச்சைகளுக்கு முகம் கொடுத்துள்ளார். ஆர்ச்சி சில்லரின் உடல்நிலை காரணமாக இயல்பான குழந்தைகள் போல் வெளியில் ஓடி, விளையாடி கிரிக்கெட் விளையாட முடியாது. எந்த விதமான விளையாட்டுக்களையும் தனது விருப்பத்துக்கு ஆர்ச்சி சில்லரால் விளையாட முடியாது. இதனால் பாடசாலை செல்வதைக்கூட ஆர்ச்சி சில்லர் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறார். ஆனால், ஆர்ச்சி சில்லருக்கு கிரிக்கெட் என்றால் ஆசை. அதிலும் அவுஸ்திரேலிய அணியின் விளையாட்டு மிகவும் பிடிக்கும்.
ஒருநாள் ஆர்ச்சி சில்லரின் தந்தை அவனிடம் ‘உன்னுடைய ஆசை என்ன’ என்று கேட்டுள்ளார். ‘நான் அவுஸதி;ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக வேண்டும்’ என்று ஆர்ச்சி சில்லர் கூறியுள்ளார். இதையடுத்து, ஆர்ச்சி சில்லரின் தந்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் கூறி, அவுஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் கூறி ஆசையை நிறைவேற்றக் கூறியுள்ளார்.
சிறுவன் ஆர்ச்சி சில்லரின் ஆசையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் நிறைவேற்ற முன்வந்துள்ளது. அதன் பிரகாரம் இந்தியாவுக்கு எதிரான மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டு, இப்போட்டிக்கு துணைத் தலைவராகவும் பொறுப்பேற்பார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *