Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவுஸ்திரேலிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றுகின்றது ரஸ்யா

அவுஸ்திரேலிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றுகின்றது ரஸ்யா

அவுஸ்திரேலியாவின் இரு இராஜதந்திரிகளை வெளியேற்றவுள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளதுபிரிட்டனில் ரஸ்யாவின் இரட்டை உளவாளி மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய இரு ரஸ்யா இராஜதந்திரிகளை வெளியேற்றியமைக்கு பதிலடியாகவே மொஸ்கோ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரஸ்யாவினால் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ள உலகநாடுகளின் 59 அதிகாரிகளில் இரு அவுஸ்திரேலிய தூதுவர்களும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஸ்யாவிற்கான அவுஸ்திரேலிய தூதுவர் பீட்டர் டெஸ் உட்பட வெளிநாட்டுதூதுவர்களை அழைத்து ரஸ்யா வெளிவிவகார அமைச்சு 59 இராஜதந்திரிகளை வெளியேற்றுள்ளதை தெரிவித்துள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய இராஜதந்திரிகளை வெளியேற்றும் ரஸ்யாவின் நடவடிக்கையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என அவுஸ்திரேலியா பிரதமர் மல்கம் டேர்ன்புலும் வெளிவிவகார அமைச்சர் யூலி பிசப்பும் தெரிவித்துள்ளனர்.
ஏனைய உலகநாடுகளின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அவுஸ்திரேலியா ரஸ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது என பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *