Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் விமானப்படையின் முக்கிய ஆவணங்கள் கணிணிகளிற்குள் ஊருடுவியர்களால் திருடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் விமானப்படையின் முக்கிய ஆவணங்கள் கணிணிகளிற்குள் ஊருடுவியர்களால்  திருடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் குறித்த இரகசிய தகவல்களை கணணிகளிற்குள் ஊருடுவியவர்கள் அபகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஓப்பந்தக்காரர் ஓருவரின் கணணியிலிருந்தே இந்த முக்கியமான விடயங்கள் களவாடப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட தகவல்கள் வர்த்தகரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆனால் இரகசியமானவை என்ற வரையறைக்குள் அடங்காதவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்வ் என்ற சந்தேகநபரே இவற்றை களவாடியிருக்கலாம் என அவுஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் யூலை மாதமே இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை நாடொன்றிற்காக யாராவது மேற்கொண்டிருக்கலாம் அல்லது தனிநபர்கள் மேற்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஓரு நிறுவனத்திற்காக பணியாற்றும் நபர் ஓருவர் மேற்கொண்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதன் காரணமாக தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *