Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவுஸ்திரேலிய பிரதமருக்கு பிரியா உருக்கமான வேண்டுகோள்

அவுஸ்திரேலிய பிரதமருக்கு பிரியா உருக்கமான வேண்டுகோள்

கிறிஸ்மஸ் தீவில் இருந்து எஸ்பிஎஸ் தமிழ்ச்சேவைக்கு கருத்து தெரிவித்த பிரியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.அவுஸ்திரேலிய பிரதமர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ,ஆகவே அவர் பிள்ளைகளின் உணர்வுகளை உணர்ந்துகொள்ளக்கூடியவராகயிருப்பார் என பிரியா தெரிவித்துள்ளார்.எனது குடும்பத்திற்கு அவர் கருணை காட்டவேண்டும் என நான் மன்றாடுகின்றேன் எனவும் பிரியா தெரிவித்துள்ளார்.நாங்கள் எப்போதும் வீட்டிற்கு செல்வோம் என குழந்தைகள் கேட்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது கணவர் மனமுடைந்துபோயுள்ளார் அதிகாரிகள் என்னை பலவந்தமாக விமானத்திற்குள் ஏற்றியவேளை காயங்களுக்குள்ளாகியுள்ளேன் என பிரியா தெரிவித்துள்ளார்.இதேவேளை குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிப்பதற்கான தீர்மானத்தை இறுதி நேரத்தில் எடுத்தால் அது படகுகள் மூலம் நுழைய முயல்பவர்களை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலியாவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.இது பொதுமக்களின் மன உணர்வு தொடர்பானதல் இது அவுஸ்திரேலியாவின் எல்லைபாதுகாப்பு தொடர்பான விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பிரியாவின் இந்த வேண்டுகோளை நிராகரிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள் என்பதற்காக தமிழ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கவைத்தால் அது மேலும் பலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் வருவதை ஊக்குவிக்கும் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *