Search
Monday 16 September 2019
  • :
  • :

அஸ்­கி­ரிய பீட மகாநா­யக்க தேரரை கைது செய்­யு­மாறு கோரியமை தவ­றான தீர்­மா­ன­மாம்- தினேஷ் குண­வர்த்­தன

அஸ்­கி­ரிய பீட மகாநா­யக்க தேரரை கைது செய்­யு­மாறு  கோரியமை தவ­றான தீர்­மா­ன­மாம்- தினேஷ் குண­வர்த்­தன

எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன அஸ்­கி­ரிய பீட மாநா­யக்க தேரர் வர­கா­கொட ஞான­ரத்ன தேரரை கைது செய்­யு­மாறு மாற்று கொள்­கை­க­ளுக்­கான மத்­திய நிலைய பொறுப்­ப­தி­காரி பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்­ளமை தவ­றான ஒரு தீர்­மா­ன­மாகும். இதனை அவர் திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குண்­டு­தாக்­குதல் தொடர்பில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் பல காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இது­வ­ரையில் யார் குற்­ற­வாளி என்­பது அறி­யப்­ப­ட­வில்லை. என்று பேராயர் மெல்கம் ஆண்­டகை குறிப்­பிட்­டுள்­ள­மையில் உண்மை தன்மை காணப்­ப­டு­கின்­றது. இவ­ரது கருத்­தினை முழு­மை­யாக வர­வேற்­கின்றோம்.மத தலை­வர்­களின் கருத்­துக்­க­ளுக்கு அர­சியல் வேறு­பா­டு­க­ளின்றி முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பௌத்த மதத்­திற்கும். இணை­யாக ஏனைய மதங்­க­ளுக்கும் உரிய அந்­தஸ்த்­துக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

குண்டு தாக்­கு­தலை தொடர்ந்து ஏற்­ப­ட­வி­ருந்த இன வன்­மு­றைகள் மத தலை­வர்­களின் வழி­ந­டத்­த­லி­னா­லேயே தவிர்க்­கப்­பட்­டுள்­ளது என்­பதை நினை­வுப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன மேலும் தெரி­வித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *