Search
Sunday 8 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் யாழ்.விஜயம்

அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் யாழ்.விஜயம்

அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வரகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பொன்றிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மற்றும் யாழ். கட்டளை தளபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இன்று மாலை புத்தூர் மடிக்கே பக்கிரசேகா தேரர் மகா வித்தியாலத்தில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றிலும் தேரர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *