Search
Sunday 20 January 2019
  • :
  • :

ஆசிய கிண்ண அணியிலிருந்து சந்திமால் நீக்கம்

ஆசிய கிண்ண அணியிலிருந்து சந்திமால் நீக்கம்

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் ஏற்பட்டில் நடைபெற்ற ரி-20 உள்ளக கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த தினேஸ் சந்திமாலுக்கு ஆசிய கிண்ண போட்டியில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
உள்ளக கிரிக்கெட் போட்டியில் கொழும்பு அணிக்கு தலைமை தாங்கினார். இதன்போது விரலில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சரியாவதற்கு இவருக்கு மேலும் ஓய்வு அவசியமானது என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனால் ஆசிய கிண்ண போட்டியின் அணியின் பட்டியலில் இருந்து இவரின் பெயர் நீக்கப்பட்டு நிரோஷன் திக்வெல்ல உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய கிண்ண போட்டிக்காக இலங்கை அணி நாளைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *