Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இருவருக்கு அம்பாறை நகரில் கொரோனா தொற்று உறுதி

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இருவருக்கு அம்பாறை நகரில் கொரோனா தொற்று உறுதி

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இருவருக்கு அம்பாறை நகரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுணன் சற்றுமுன் தெரிவித்தார்.எனவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் அவர் தெரிவித்தார்.இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கல்முனை பிராந்தியத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 32 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்களின் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாமெனவும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும் இதனை உதாசீனம் செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்துக்கு வருபவர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் கேட்டுள்ள அவர் பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தைகள் வணக்கஸ்தலங்கள் ஆகிவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் கேட்டுள்ளார்.இதே வேளை கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு மற்றுமொரு பேருந்து நடத்துநருக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *