Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆட்ட நிர்ணய சதி நடந்ததா? சங்கக்கார விசாரணைக்கு அழைப்பு

ஆட்ட நிர்ணய சதி நடந்ததா? சங்கக்கார விசாரணைக்கு அழைப்பு

2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக விசாரணை நடத்தவென விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் வெளியிட்ட தகவலை தொடர்ந்து அது தொடர்பான விசாணை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே குமார் சங்கக்காரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா நேற்றைய தினம் அந்த குழு முன்னிலையில் வாக்குமூலமளித்திருந்ததுடன் இன்றைய தினத்தில் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க வாக்குமூலமளித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.  -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *