Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆட்ட நிர்ணய சதி நடந்ததா? விசாரணை முடிவு இதோ

ஆட்ட நிர்ணய சதி நடந்ததா? விசாரணை முடிவு இதோ

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதி போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இல்லையென அது தொடர்பாக விசாரணை நடத்திய குழு தெரிவித்துள்ளது.
மகிந்தனந்த அலுத்கமகேவினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவினரால் கடந்த நாட்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு வந்ததுடன் அது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தன.
இதன்படி அது தொடர்பான விசாரணையை முடித்துள்ள அந்த குழு மகிந்தனந்த அலுத்கமகேவின் குற்றச்சாட்டு தொடர்பாக போதுமான சாட்சியங்கள் இல்லையெனவும் இது தொடர்பான அறிக்கையை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *